வரட்சியான காலநிலையால் தொடரும் அதிக வெப்பத்தால், தண்ணீர் பாவனை அதிகரித்துள்ளதாக நீர்வளங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.கே.அன்சார் தெரிவித்துள்ளார்.
கொழும்பு உள்ளிட்ட நகர்புறங்களில், தண்ணீர் பாவனை நூற்றுக்கு 15 சதவீதமளவில் அதிகரித்துள்ளது.
எவ்வாறிருப்பினும், தற்போதைய நிலைமையை முகாமைத்துவம் செய்யக்கூடிய வகையில், தண்ணீர் விநியோகத்தை சிறப்பாக வழங்கக்கூடியதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், மலையகம் மற்றும் நாட்டின் ஏனைய தூரப்பிரதேசங்களுக்கு நீரை விநியோகம் செய்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுன்ளதாக நீர்வளங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

