கூட்டு எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை

231 0

தம்மை கட்சியில் இருந்து விலக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், அதற்கு எதிராக நீதிமன்றம் செல்லப்போவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் எச்சரித்துள்ளனர்.

தம்மை கட்சியில் இருந்து நீக்க எவ்வித அதிகாரமும் கட்சியின் தலைமைக்கு இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் மேதின நிகழ்வில் பங்கேற்றமை தொடர்பில் டளஸ் அழகப்பெரும் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை எச்சரித்திருந்தது.

எனினும் இது தொடர்பில் தமக்கு தகவல் எவையும் கிடைக்கவில்லை என்று அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ஒழுக்காற்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டால், நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்லவேண்டி ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில் கூட்டு எதிர்க்கட்சியின் பலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், இணைந்து செயற்பட பேச்சு வார்த்தை நடத்திவருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.