ஸ்நோவ்டெனுக்கு அடைக்கலம் அளித்த இலங்கையர்கள் நாடு கடத்தப்படும் அச்சத்தில்

375 0
அமெரிக்க ரகசியங்களை வெளியிட்ட புலனாய்வு அதிகாரியான எட்வேட் ஸ்நோவ்டெனுக்கு அடைக்கலம் அளித்த இலங்கையர்கள் விரைவில் நாடு கடத்தப்படலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு ஹொங்கொங்கில் வைத்து எட்வேட் ஸ்நோவ்டெனனுக்கு இலங்கையர்கள் அடைக்கலம் வழங்கினர்.

குறித்த இலங்கையர்கள் தமக்கு இலங்கையில் உயிரச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவித்து, 2008ஆம் ஆண்டு ஹொங்கொங்கில் குடியமர்ந்தனர்.

இந்தநிலையில், அமெரிக்க இராணுவ இரகசியங்களை வெளிட்ட ஸ்நோவ்டென் அச்சுறுத்தல் காரணமாக, அமெரிக்காவில் இருந்து வெளியேறிய நிலையில் அவருக்கு குறித்த இலங்கையர்கள் ஹொங்கொங்கில் அடைக்கல் வழங்கினர்.

இந்தநிலையில் குறித்த அகதிகளில் ஒருவரான இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர் அஜித் புஸ்பகுமார, இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் திங்கட்கிழமை தமக்கு குடிவரவு திணைக்களத்தின் இறுதி நேர்முக விசாரணை இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் உரிய ஆவணங்களை தாம் சமர்ப்பித்துள்ள போதும் தாம் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர் நோக்கியுள்ளதாகவும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

இவருடன் 2010 ஆம் ஆண்டு முதல் தங்கியுள்ள ஏனைய இரண்டு இலங்கை அகதிகளும் அவரின் பிள்ளைகளும் இதேபோன்ற அச்சத்தை வெளியிட்டுள்ளனர்.

எட்வேட் ஸ்நோவ்டென் தற்போது ரஸ்யாவில் தஞ்சம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.