தேசிய நல்லிணக்கக் கொள்கை வரைவு அங்கீகாரம் குறித்து சந்திரிகா பண்டாரநாயக்க வரவேற்பு

228 0

இலங்கையின் முதலாவது தேசிய நல்லிணக்கக் கொள்கை வரைவை அமைச்சரவை ஏற்றுக்கொண்டதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வரவேற்றுள்ளார்.

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கக் கொள்கை அலுவலகத்தின் இந்த வரைவை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாரம் சபையில் சமர்ப்பித்திருந்தார். இதை அமைச்சரவை ஏற்றுக்கொண்டது.

நல்லிணக்கத்துக்கான தேசியக் கொள்கையொன்றை அறிமுகப்படுத்தும் முயற்சி 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரம்பமானது. அது முதல் சுமார் ஒரு வருட காலம் வரைவுக்கான ஆலோசனைகள் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் பல்வேறு தரப்புகளிடம் இருந்து பெறப்பட்டன.

மேலும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைகள், உடலகம ஆணைக்குழு அறிக்கைகள், பரணகம ஆணைக்குழு அறிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களும் இந்த வரைவுக்காக சீர்தூக்கி ஆராயப்பட்டுள்ளது.