வைத்­தியர் சங்க தலைவருக்கு நீதி­மன்றம் அழைப்­பாணை

233 0

அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் தலைவர் வைத்­தியர் அனு­ருத்த பாதெ­னி­யவை எதிர்­வரும் 22 ஆம் திகதி நீதி­மன்­றத் தில் ஆஜ­ரா­கு­மாறு அழைப்­பாணை விடுக்­கப்­பட்­டுள்­ளது. நீதி­மன்­றத்­தினை அவ­ம­தித்தார் என்ற கார­ணத்­தி­னா­லேயே அவ­ருக்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் அழைப்பாணை விடுத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அண்­மையில் மேல் நீதி­மன்றம் சைட்டம் தனியார் கல்­லூ­ரியில் கற்கை நெறி­களை பூர்த்தி செய்­த­ மாணவர்களை  ஏற்­றுக்­கொண்டு அவர்­கள்­கு வைத்­தி­யப்­பட்டம் பெற அனு­மதி வழங்க வேண்டும் என தீர்­ப­ளித்­தி­ருந்­தது.

அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் தலைவர் அனு­ருத்த பாதெ­னிய சைட்டம் தனியார் கல்வி நிலைய விவ­கா­ரத்தில் வெளி­யிடும் கருத்­துக்கள் முழு­மை­யாக நீதி­மன்­றத்தை அவ­தூறு செய்­வ­தாக அமைந்­துள்­ளது. அதனால் அவ­ருக்கு உரிய தண்­ட­னை­களை சட்­டத்தின் பிர­காரம் பெற்­றுக்­கொடுக்க வேண்டும் என்று சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்கள் குழு­வொன்று தாக்கல் செய்­துள்ள மனு கொழும்பு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் நேற்­றைய தினம் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போதே மேற்­படி உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

சமூக நீதிக்­கான மக்கள் அமைப்­பினை சேர்ந்த பேரா­சி­ரியர் சரத் விஜே­சூ­ரிய, பிர­ஜைகள் முன்­ன­ணியின் ஒருங்­கி­ணைப்­பாளர் காமினி வியங்­கொட ஆகியோர் குறித்த மனுவை நேற்று முன்­தினம் தாக்கல் செய்­தி­ருந்­தனர். இதில் பிர­தி­வா­தி­யாக அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் தலைவர் வைத்­தியர் அனு­ருத்த பாதெ­னி­யவின் பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதன் போது மனு­தார்கள் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி, மேற்­படி விவ­காரம் குறித்து மேல் நீதி­மன்றம் வழங்­கி­யுள்ள தீர்ப்­பினை கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டபோது இவ்வழக்கின் பிரதிவாதி நீதிமன்ற தீர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளதாக மன்றிற்கு சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்தே பாதெனியவை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.