இஸ்ரோ, தென்னாசிய செய்மதியை விண்ணில் செலுத்தியது.

236 0

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, தென்னாசிய செய்மதியை இன்று பிற்பகல் 4.57 க்கு ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தியது.

குறித்த செய்மதியானது, இலங்கை, பங்களாதேஸ், பூட்டான், இந்தியா, நேபாளம், மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு, காலநிலை அறிவுறுத்தல் மற்றும் தகவல் தொடர்பாடல் விடயங்களுக்கு பிரயோசனப்படவுள்ளது.

இந்த செய்மதிக்காக 235 கோடி ரூபாவை செலவிட்டுள்ள இந்திய அரசாங்கம், இதனை தெற்காசிய நாடுகளுக்கான அன்பளிப்பாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

எனினும் இந்த வேலைத்திட்டத்தில் இருந்து பாகிஸ்தான் வெளியேறியுள்ளது.

இதற்கு முன்னர் இலங்கை சீனாவுடன் இணைந்து 2012 ஆம் ஆண்டு தொடர்பாடல்களுக்கான செய்மதி ஒன்றை விண்ணில் செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.