கம்பளையில் காணாமல் போனவர்களை தேடி 3 காவல்துறை குழுக்கள்

308 0

கம்பளை – கங்வட்டபார பிரதேசத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டரை வயதுடைய குழந்தை மற்றும் 26 வயதுடைய இளைஞரை தேடி 3 காவற்துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நேற்று முதல் அவர்கள் காணாமல் போயுள்ளதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குழந்தையுடன் காணாமல் போன குறித்த இளைஞர் அவர்களின் உறவினர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று அவர்கள் நகரப்பகுதிக்கு சென்ற வேளையிலேயே காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.