பிரான்ஸ் நீதித்துறை மீது பிரதமர் குற்றச்சாட்டு

367 0

Manuel-Valls1பிரான்ஸில் நீதித்துறையின் தோல்வி காரணமாகவே கடந்த செவ்வாய்க்கிழமையன்று தேவாலயத்துக்குள் தாக்குதல் நடத்தப்பட்டு பாதிரியார் ஒருவர் கொல்லப்பட்டதாக பிரதமர் Manuel Valls தெரிவித்துள்ளார்.
செய்திதாள் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த பலர் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கு அரசாங்கம் காரணமல்ல. அவர்கள் சுயாதீன நீதிபதிகளாலேயே விடுவிக்கப்பட்டதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதிரியார் கொல்லப்பட்டமை தொடர்பில் பிரதமர் Manuel Valls மீதே விமர்சனங்கள் தொடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.