வடக்கில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்த வேண்டும்

321 0

sivajilinkamவடக்கு தமிழ் மக்கள் சமஷ்ட்டியை விரும்பவில்லை என்று அரசாங்கம் கருதுமாக இருந்தால், அது குறித்து வடக்கில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்த வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளது.

அதன் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.அரசியல் யாப்பு தொடர்பான கருத்துக்களை திரட்டிவந்த குழு, தமிழ் மக்கள் சமஷ்ட்டியை விரும்பவில்லை என்றும், அரசியல்வாதிகளே சமஷ்ட்டி குறித்து வலியுறுத்துவருவதாகவும் தெரிவித்திருந்தது.
இது பிழையான கருத்து.

பெரும்பாலான தமிழ் மக்கள் சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வையே வலியுறுத்தியதாக, இந்த குழுவில் அங்கம் வகித்திருந்த வடமாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் தவராசா விளக்கமளித்துள்ளார்.1948ம் ஆண்டு முதல் தமிழ் மக்கள் முகம் கொடுத்து வருகின்ற பிரச்சினைகளுக்கு ஒற்றையாட்சி மூலம் தீர்வு காணப்பட முடியாது என்பது நிரூபனமாகியுள்ளது.

எனவே அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வு தேவையா? இல்லையா? என்பது தொடர்பில் பொதுசன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.