இங்கிலாந்தில் ஓவியங்களாக சங்கா, மஹேல

341 0

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான சங்கா மற்றும் மஹேல இங்கிலாந்தில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தின் லோட்ஸ் கழக உறுப்பினர்களாலேயே இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குமார் சங்கக்கார தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதுடன், லோட்ஸ் கழக உறுப்பினர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

குறித்த ஒவியமானது இங்கிலாந்தின் என்ற இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,குறித்த இடத்திற்கு சென்ற சங்கா அந்த ஓவியங்களுக்கு அருகில் இருந்து புகைப்படமும் எடுத்து தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.