ஆட்டமிழந்து சாதனைப் படைத்த மிஷ்பா

233 0

டெஸ்ட் போட்டிகளின் போது 99 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 3 தடவைகள் ஆட்டமிழந்த சாதனையை பாகிஸ்தானின் டெஸ்ட் அணித் தலைவர் மிஷ்பா உல் ஹக் பெற்றுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக பிரிட்ஸ்டவுனில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தின் போது போட்டியில் நேற்றைய தினம் துடுப்பெடு;த்தாடிக் கொண்டிருந்த மிஷ்பா 99 ஓட்டங்களுக்கு 3வது தடவையாகவும் ஆட்டமிழந்து சென்றுள்ளார்.

இதேவேளை கடந்த 2011ஆம் ஆண்;டு நியுசிலாந்து அணிக்கெதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் முதற்தடவையாக 99 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த மிஷ்பா தற்போது நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது போட்டியிலும் 99 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்திருந்திருந்ததுடன்,நேற்றைய இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் 99 ஓட்டங்களைப் பெற்ற வேளை ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.