மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க சர்வதேச ரீதியாக செயற்பட்ட படைகளுடன் பராக் ஒபாமா அமெரிக்க வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 454 மில்லியன் நிதியை ஒதுக்கியதாக, பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதனை தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் வௌிப்படுத்தியுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் இன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் படையொன்று நிர்மாணிக்கப்பட்டதாகவும், அதன் பிரதிபலனாக தற்போதைய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் குறித்து மக்களுக்கு பாரிய எதிர்ப்பு உள்ளதாகவும் ரத்நாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை பறைசாற்றும் வகையில் மஹிந்த ராஜபக்ஷவுடன் மே தினத்தில் சகல மக்களும் கைகோர்த்துக் கொண்டனர், எனினும், அவரது பாதுகாப்பை கூட நீக்கி அரசாங்கம் தனது கொள்கையை காட்டியுள்ளது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க கூறியுள்ளார்.
அத்துடன், சுமந்திரன் போன்றவர்களுக்கும் கடந்த காலத்தில் பாதுகாப்பு வழங்கப்பட்டது என குறிப்பிட்டுள்ள அவர், எனினும் நாட்டை காப்பாற்றிய தலைவரின் பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு எதிராக சகல மதத் தலைவர்களும் அணி திரள வேண்டும் எனவும் சீ.பீ. ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

