பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

314 0

பாகிஸ்தானின் கடற்படைக்கு சொந்தமான “சுல்பிகூவர்” கப்பல் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்நிலையில் குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர் மரபு ரீதியில் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில் “சுல்பிகூவர்” கப்பலின் கட்டளைத் தளபதி, கப்பலின் கெப்டன் பைசல் ஜவீட் மற்றும் நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு வருகைத் தந்த பாகிஸ்தான் கடேலோர பாதுகாப்பு படையினரின் “டஷ்ட்” கப்பலின் கட்டளை அதிகாரி, கட்டளை தளபதி முன்வர் அபாஷ் சக்லையின் ஆகியோரை இலங்கை கடற்படை தளபதி வைஷ் அட்மிரல் ரவீந்ர விஜேகுணவர்தன சந்தித்ததுடன், அவர்களுக்கிடையில் நினைவு சின்னங்களும் பகிரப்பட்டன.

இதேவேளை வருகைத்தந்துள்ள பாகிஸ்தானின் “சுல்பிகூவர்” கப்பலின் வீரர்கள் இலங்கை கடற்படை வீரர்களுடன் கரப்பந்து மற்றும் கூடைப்பந்து போன்ற போட்டிகளில் ஈடுபடவுள்ளதுடன், நிகழ்வுகளிளும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

இதனையடுத்து குறித்த“சுல்பிகூவர்”  கப்பல் எதிர்வரும் 7 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.