தேசிய அருங்காட்சிய வளாகம் பொலித்தீன் அற்ற வலயமாக பிரகடனம்

385 0

கொழும்பு தேசிய அருங்காட்சியக வளாகம் பொலித்தீன்கள் அற்ற வலயமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ வைபம் எதிர்வரும் 15ம் திகதி நடைபெறும்.

தேசிய அருங்காட்சியகத்தை பார்வையிடச் செல்வோர் முறையான விதத்தில் கழிவகற்றும் பணிகளை மேற்கொள்ளாமையினால், அருங்காட்சிய வளாகத்தில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

பொலித்தீன் பிளாஸ்டிப் போத்தல்கள், றெஜிபோம் என்பனவற்றை எடுத்து வர வேண்டாம் என்று அருங்காட்சியக நிர்வாகிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது