பொன்சேகா தொடர்பில் அமைச்சரவையில் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை- ரணில்

369 0

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கூட்டுப் படைகளின் தளபதியாக நியமிப்பது தொடர்பில் அமைச்சரவையில் எந்த தீர்மானமும் முன்னெடுக்கப்படவில்லை என பாராளுமன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்று வரும் பாராளுமன்ற அமர்வில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பிரதமர் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் சிறப்பு இராணுவம் அமைப்பதற்கு தற்போது எந்த தேவையும் இல்லை. கடந்த அமைச்சரவையின் போது குப்பை பிரச்சினை தொடர்பிலேயே கலந்துரையாடப்பட்டது. பொன்சேகாவை பற்றியல்ல என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

சரத் பொன்சேகாவை கூட்டுப் படைகளின் தளபதியாக நியமிப்பது தொடர்பில் எதுவும் அமைச்சரவையில் பேசப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, அரசியல் நோக்கில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் போது மக்களுக்கானஅத்தியாவசிய சேவையை முன்னெடுப்பதற்காக அனைத்துத் தரப்புக்களையும் உள்ளடக்கிய செயலணியை நிறுவ வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்