சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனன தின நிகழ்வுகள் மட்டக்களப்பில்…………(காணொளி)

393 0

சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனன தின நிகழ்வுகள் இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றன.

சுவாமி விபலானந்தர் நூற்றாண்டு விழா சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி இராமகிருஸ்ண மிசனில் உள்ள சுவாமி விபுலானந்தரின் சமாதியில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் மட்டக்களப்புகல்லடி இராமகிருஸ்ண மிசன் தலைவர் சுவாமி பிரபு பிரபானந்தமகராஜ் மற்றும் சுவாமி விபலானந்தா நூற்றாண்டு விழா சபையின் தலைவர்க.பாஸ்கரன், பொதுச்செயலாளர் ச.ஜெயராஜன் உட்பட பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றதுடன் 125வது ஆண்டை குறிக்கும் வகையில் மரநடுகையும் நடைபெற்றது.