வரட்­சி­யினால் 9 இலட்சம் பேர் தவிப்பு : வடக்கில் 4 இலட்சம் பேர் பாதிப்பு

403 0

நாட்டில்  14 மாவட்­டங்­களில் கடு­மை­யான வரட்சி நில­வு­கின்­றது. இந்த வரட்சி கார­ண­மாக 2 இலட்­சத்து 61 ஆயி­ரத்து 467 குடும்­பங்­களைச் சேர்ந்­த 9 இலட்­சத்து 58 ஆயி­ரத்து 434 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் அறி­வித்­துள்­ளது.

மேல் மாகாணம், வடக்கு மாகாணம் , தென் மாகாணம், கிழக்கு மாகாணம், வட­மத்­திய மாகாணம், வடமேல் மாகா­ணங்­களில் கடந்த காலங்­க­ளாக அதி­க­ள­வி­லான வெப்­பத்­து­ட­னான கால­நிலை  நிலவி வரு­கின்­றது. அதன் கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள வரட்­சி­யினால் மக்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்த வரட்­சி­யினால் வடக்கு மாகா­ணமே அதி­க­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இங்கு 1 இலட்­சத்து 32 ஆயி­ரத்து 41 குடும்­பங்­களை சேர்ந்த 4 இலட்­சத்து 5 ஆயி­ரத்து 523 பேர் பாதிக்ப்­பட்­டுள்­ளனர். அத­னை­ய­டுத்து மேல் மாகா­ணத்தில் அதி­க­ள­வான வெப்­பத்­துடன் கூடிய சூழல் காணப்­ப­டு­கின்­றது.

இங்கு 59 ஆயி­ரத்து 766 குடும்­களை சேர்ந்த  2 இலட்­சத்து 51 ஆயி­ரத்து 321 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். மூன்­றா­வ­தாக வடமேல் மாகாணம் வரட்­சி­யினால் அதி­க­ப­டி­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இங்கு 36 ஆயி­ரத்து 99 குடும்­பங்­களை சேர்ந்த 1 இலட்­சத்து 27 ஆயி­ரத்து 641 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் வட மத்­திய மாகா­ணத்தில் அனு­ரா­த­புரம் மாவட்­டத்தில் மக்கள் அதிகம் பாதிக்­கப்­ப­ட்­­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அனு­ரா­த­புரம் மாவட்­டத்தில் பல்­வேறு குளங்கள் வற்றிப் போயுள்­ளன. நிலக்கீழ் நீர் 27 அடிக்கும் கீழி­ருந்தே வற்­றிப்­போ­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதனால் விவ­சாய தொழில் பெரிதும் பாதிக்கப்டப்டுள்ளதாக அரசாங்ம் தமக்கான நிவாரணங்களை பெற்றுத்தருவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதிவாள் மக்கள் கோரியுள்ளனர்.