இ.போ.ச.வுக்கு மே தின வருமானம் 83 மில்லியன் ரூபா

233 0

உலக தொழிலாளர் தினத்தன்று இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 83 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாக அச்சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளுக்கு பஸ்களை வழங்கியதனால் மாத்திரம் 58.6 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.