ரஷ்ய மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை

204 0

சிரியாவில் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில், ரஷ்ய மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

தொலைபேசி வழியாக நேற்று இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இரண்டு நாடுகளின் தலைவர்களும் இந்த விடயத்தில் ஒன்றிணைந்து செயற்பட ஆர்வத்தை வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது.

சிரிய அரச படையினர் இரசாயனத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டை அடுத்து, அரச படையினருக்கு எதிராக அமெரிக்கா எரிகணைத் தாக்குதல்களை நடத்தி இருந்தது.

இதனை அடுத்து அமெரிக்க – ரஷ்ய ஜனாதிபதிகளுக்கு இடையில் இடம்பெறும் முதலாவது பேச்சுவார்த்தை இதுவாகும்.

அதேநேரம் எதிர்வரும் ஜுலை மாதம் நடைபெறவுள்ள ஜீ20 மாநாட்டின் போது, இருவரும் பிரத்தியேக சந்திப்பை நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து பேசிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.