வெனிசுலா ஜனாதிபதிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன.

320 0

வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதைகளை மறித்து எரியூட்டியும், எதிர்ப்புக் கூட்டங்களை நடத்தியும் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அங்கு தேர்தலை நடத்த வலியுறுத்தி இந்த போராட்டம் இடம்பெறுகிறது.

இந்த போராட்டங்களால் இதுவரையில் 28 பேர் வரையில் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.