ஜேர்மனியின் அதிபர் ரஷ்யாவின் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்.

253 0

ஜேர்மனியின் அதிபர் ஏஞ்சலா மேர்க்கல், ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை சந்திக்கவுள்ளார்.

2015ஆம் ஆண்டுக்கு பின்னர் அவர்கள் இருவரும் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்த சந்திப்பின் போது சிரியா மற்றும் க்ரைமியா விவகாரங்கள் குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த பேச்சுவார்த்தைகளில் எந்த இறுதித் தீர்வையும் எதிர்பார்க்க முடியாது என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஜனாதிபதி புட்டின் நாளை துருக்கியின் ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.