காங்கேசன்துறையில் பிரதேசத்தில் அத்துமீறி உள்நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அகதிகள் இந்தியாவில் இருந்து வந்துள்ளனர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
காங்கேசன்துறையில் பிரதேசத்தில் இவ்வாறு 32 பேர் நேற்றையதின் படகொன்றில் வந்த நிலையில், கடற்படையினர் இவர்களை கைது செய்தனர்.
இந்த படகு காங்கேசன்துறையில் பிரதேசத்தில் இருந்து 12 கடல் மைல் தூரத்தில் கைப்பற்றப்பட்டது.
குறித்த படகில் இந்தியவை சேர்ந்த 2 பேர், மியன்மாரை சேர்ந்த 14 பேர் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

