சர்வதேசத்திற்கு அஞ்ச போவதில்லை – வடகொரியா

335 0

சர்வதேச நாடுகள் எதிர்த்தாலும் அவற்றுக்கு ஒருபோதும் செவிசாய்க்க போவதில்லை என வடகொரியா அறிவித்துள்ளது.

இந்த நிலையில், வடகொரியா நேற்று மீண்டும் ஒரு ஏவுகணையினை சோதனை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் குறித்த ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்ட சில நொடிகளிலேயே வெடித்து சிதறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வி அடைந்துள்ளதாக தென்கொரியாவும், அமெரிக்காவும் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.