ஒன்றிணைந்த எதிரணிக்கு கரப்பந்தாட்ட மைதானத்தை வழங்கியிருப்போம்-கபீர் ஹாசிம்

286 0

ஒன்றிணைந்த எதிரணியின் கோரிக்கைக்கு ஏற்பவே, அவர்களின் மே தினத்துக்காக காலி முகத்திடல் வழங்கப்பட்டதாகத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம், அவர்களுக்குக் கரப்பந்தாட்ட மைதானத்தை வழங்கியிருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில், நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். “மே தினத்தன்று மக்கள் தொகை மிகவும் அதிகமாக இருப்பதனால், காலி முகத்திடல் பகுதியை முழுமையாகத் தங்களுக்கு தருமாறு, ஒன்றிணைந்த எதிரணி கோரியது.

அதனை நாங்கள், இல்லையென்று சொல்லாமல் கொடுத்தோம். பின்னர் துறைமுக நகரமும் வேண்டும் என்று கேட்கின்றார்கள். “இவர்களுக்கு வழங்கப்பட்ட காலி முகத்திடல் பகுதியில், 30 சதவீதத்தை மட்டுமே, மே தினத்துக்குப் பயன்படுத்தியுள்ளனர். இவ்விடயம் தெரிந்திருந்தால், கிராமத்திலுள்ள மயானப்பகுதி அல்லது கரப்பந்தாடுவதற்குக் கொடுக்கப்படும் பகுதியை, நாங்கள் வழங்கியிருப்போம்” என்றார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “20 ஆண்டுகளாகச் செய்ய முடியாத வேலைத்திட்டங்களை, தற்போது செய்து கொடுத்துள்ளோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, சொல்வது மட்டுமே. அவர், எந்ததொரு வேலையினையும் செய்வதில்லை. நாங்கள், மக்களுக்கு பயனுள்ள வேலைத்திட்டங்களை முன்னெடுத்து, நடைமுறைப்படுத்திச் செல்கின்றோம்” என்றார்.

இன்று இடம்பெறவுள்ள மே தினம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், “அரசியல் கட்சிகள், தங்களின் பலத்தையும் அதனுடைய கொள்கைகளையும் வெளிப்படுத்தும் ஒரு தினம் போலத்தான், எமது நாட்டில் மே தினம், கொண்டாடப்பட்டு வருகின்றது. உண்மையில்,  உழைக்கும் வர்க்கங்களை இங்கு முதன்மைப்படுத்துவதனைக் காணமுடியாது உள்ளது.

“மே தினம் என்பது, மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கும் ஏழைத் தொழிலாளர்களின் தினமாகவே, ஐக்கிய தேசிய கட்சி இவ்வளவு காலமும் முதன்மைப்படுத்தி வந்துள்ளது. “நாங்கள், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை, ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடி, தற்போது பெற்றுக் கொடுத்துள்ளோம். இதில், உண்மையாக உழைக்கும் மக்களின் செயற்பாடுகளை மென்மேலும் விருத்தி செய்வதற்கான ஒரு வேலைத்திட்டத்தினையே மேற்கொள்ள உள்ளோம்” என்று தெரிவித்தார். “எங்களது மேதின ஊர்வலமானது, மருதானை பிரதான வீதியில் 11 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு, கம்ப்பெல் மைதானத்தைச் சென்றடையும்.

இதன் பின்னர் 2 மணியளவில், ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக்கூட்டம் இடம்பெறும். இதில் ஐக்கிய தேசிய முன்னணி, தேசிய இளைஞர் முன்னணி, மகளிர் முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கலந்துகொள்ள உள்ளன” என, அவர் மேலும் தெரிவித்தார். “மே தினத்தன்று மக்கள் தொகை மிகவும் அதிகமாக இருப்பதனால், காலி முகத்திடல் பகுதியை முழுமையாகத் தங்களுக்கு தருமாறு, ஒன்றிணைந்த எதிரணி கோரியது. அதனை நாங்கள், இல்லையென்று சொல்லாமல் கொடுத்தோம். பின்னர் துறைமுக நகரமும் வேண்டும் என்று கேட்கின்றார்கள். “இவர்களுக்கு வழங்கப்பட்ட காலி முகத்திடல் பகுதியில், 30 சதவீதத்தை மட்டுமே, மே தினத்துக்குப் பயன்படுத்தியுள்ளனர். இவ்விடயம் தெரிந்திருந்தால், கிராமத்திலுள்ள மயானப்பகுதி அல்லது கரப்பந்தாடுவதற்குக் கொடுக்கப்படும் பகுதியை, நாங்கள் வழங்கியிருப்போம்” என்றார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “20 ஆண்டுகளாகச் செய்ய முடியாத வேலைத்திட்டங்களை, தற்போது செய்து கொடுத்துள்ளோம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, சொல்வது மட்டுமே. அவர், எந்ததொரு வேலையினையும் செய்வதில்லை. நாங்கள், மக்களுக்கு பயனுள்ள வேலைத்திட்டங்களை முன்னெடுத்து, நடைமுறைப்படுத்திச் செல்கின்றோம்” என்றார். இன்று இடம்பெறவுள்ள மே தினம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், “அரசியல் கட்சிகள், தங்களின் பலத்தையும் அதனுடைய கொள்கைகளையும் வெளிப்படுத்தும் ஒரு தினம் போலத்தான், எமது நாட்டில் மே தினம், கொண்டாடப்பட்டு வருகின்றது. உண்மையில்,  உழைக்கும் வர்க்கங்களை இங்கு முதன்மைப்படுத்துவதனைக் காணமுடியாது உள்ளது. “மே தினம் என்பது, மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கும் ஏழைத் தொழிலாளர்களின் தினமாகவே, ஐக்கிய தேசிய கட்சி இவ்வளவு காலமும் முதன்மைப்படுத்தி வந்துள்ளது.

“நாங்கள், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை, ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடி, தற்போது பெற்றுக் கொடுத்துள்ளோம். இதில், உண்மையாக உழைக்கும் மக்களின் செயற்பாடுகளை மென்மேலும் விருத்தி செய்வதற்கான ஒரு வேலைத்திட்டத்தினையே மேற்கொள்ள உள்ளோம்” என்று தெரிவித்தார். “எங்களது மேதின ஊர்வலமானது, மருதானை பிரதான வீதியில் 11 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு, கம்ப்பெல் மைதானத்தைச் சென்றடையும். இதன் பின்னர் 2 மணியளவில், ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக்கூட்டம் இடம்பெறும். இதில் ஐக்கிய தேசிய முன்னணி, தேசிய இளைஞர் முன்னணி, மகளிர் முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கலந்துகொள்ள உள்ளன” என, அவர் மேலும் தெரிவித்தார் –