சுகா­தா­ரப் பரி­சோ­த­கர்­களுக்கு இடைக்கால தடை

229 0

வடக்கு மாகாண சுகா­தார திணைக்­க­ளம் மற்­றும் உள்ளூராட்­சிச் சபை­க­ளில் கட­மை­யாற்­றும் பொதுச் சுகா­தா­ரப் பரி­சோ­த­கர்­கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாக,  வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன், நேற்று தெரிவித்துள்ளார்.

இந்த தடையுத்தரவானது 28ஆம் திகதியிடப்பட்டு யாழ். மாவட்ட நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளாகவும் அவர் கூறியுள்ளார். இந்த தடையுத்தரவின் பிரகாரம்,  பொதுச் சுகா­தா­ரப் பரி­சோ­த­கர்­கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கியூ.உபுள் ரோகண, செயலாளர் கே.ஏ. சிறிபால மற்றும் யாழ். தலைவர் ஜீ.சதீஸ் ஆகியோரின்  பெயர் குறிப்பிடப்பட்டு இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனுதாரரான வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சி.திருவாகரனால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடையுத்தரவை மீறுபவர்கள் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்க உள்ளாக நேரிடும் என்றும் அந்த தடையுத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுச் சுகா­தா­ரப் பரி­சோ­த­கர்­கள், 28ஆம் திகதி தொடக்­கம் வெளிக்­கள வேலைப் பணிப்புறக்கணிப்பில் ஈடு­பட்­டுள்­ள­தாக ஊடகங்களுக்கு விடுத்திருந்த அறிக்கை குறித்து பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சி­னால் கடந்த ஜன­வரி முத­லாம் திகதி தொடக்­கம் நடை­மு­றைக்கு வரும் வகை­யி­ல் வெளியிடப்பட்ட  இட­மாற்­றப் பட்­டி­யல், தாபன விதிக்­கோ­வைக­ளுக்கு முரணானது எனக் கூறிப் பொதுச் சுகாதாரப் பரி­சோ­த­கர்­கள் வெளிக்­க­ளப் பணிப்­பு­றக்­க­ணிப்­பில் ஈடுபட்­டுள்­ள­தாக தெரிவித்திருந்தனர். அத்துடன், பொதுச் சுகா­தா­ரப் பரி­சோ­த­கர்­கள், கடந்த டிசெம்­பர் மாதம் முதல், ஜன­வரி 10 திகதி வரை  22 நாட்கள் வெளிக்­க­ளப் பணிப்­பு­றக்­க­ணிப்­பில் ஈடு­பட்­டிருந்தனர். தொழிற்­சங்­கத்­தி­னர் – மாகாண சுகா­தார அமைச்­ச­ர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.