வறட்சியான காலநிலை, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்- இ.மி.ச

311 0

நாட்டில் தற்பொழுது நிலவுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மின்சாரத்துக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில், நீரேந்து பகுதிகளில் நீர் மட்டம் குறைவாக காணப்படுவதாகவும், இதனால் நீர்மின் உற்பத்தியின் வீதம் குறைவடைந்துள்ளதாகவும் மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது