உங்களது பிள்ளைக்கும் ஓடிசம் உள்ளதா? -சுகாதாரக் கல்விக் காரியாலயம்

422 0

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் தரம் 01 இற்கு சேர்க்கப்படும் பிள்ளைகளில் 4500 பேருக்கு ஓடிசம் (தற்சிந்தனைப் போக்கு) காணப்படுவதாக கொழும்பிலுள்ள சுகாதார கல்விக் காரியாலயம் அறிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விபரங்களுக்கு அமைய 93 பிள்ளைகளில் ஒருவருக்கு ஓடிசம் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளதாகவும் இந்த கணிப்பீட்டின் அடிப்படையில் இந்த தொகை பெறப்பட்டுள்ளதாகவும் அக்காரியாலயம் கூறியுள்ளது.

இந்த வகையான தன்மை கொண்ட பிள்ளைகளின் அடையாளங்களாக, பிள்ளை சமூகமயப்படாதிருத்தல், தூண்டலுக்கு ஏற்ப துலங்கள் குறைவடைதல், விருப்பு வெறுப்புக்கள் வரையறுக்கப்படல் என்பன சாதாரணமாக காணப்படும். இந்த தன்மையுள்ள பிள்ளைகளிடம் அடையாளங்களாக வலிப்பு, உடல் பலவீனம், தூக்கப் பிரச்சினை என்பன காணப்படும்.

இந்த ஓடிசம் ஏற்படுவதற்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படாதுள்ளதாகவும் அக்காரியாலயம் மேலும் தெரிவித்துள்ளது