சய்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக பரந்தளவிலான ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.
அதன்படி எதிர்வரும் மே மாதம் 03 முதல் 05 வரையான திகதிகளில் ஒருநாள் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.
சய்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் எழுந்துள்ள முரண்பாடு சம்பந்தமாக பேசுவதற்கு நேற்றிரவு கூடிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னெடுக்கப்பட உள்ள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மேலும் பல தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதுடன், மே மாதம் 09ம் திகதியாகும் போது அரசாங்கம் சரியான தீர்வொன்றை வழங்காவிட்டால் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.
இந்த போராட்டத்தின் போது சுமார் 160 தொழிற்சங்கங்கள் இணைந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

