கைக்குண்டுடன் நபர் ஒருவர் கைது

315 0

கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த பிரஜை ஒருவர் அம்பலாங்கொடை, பொல்வத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பலாங்கொட, பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.