கெட்டம்பே மே தினக் கூட்டத்தில் ஒரு லட்சம் இளைஞர், யுவதிகள்- சாந்த பண்டார

310 0

கண்டி கெட்டம்பே விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞர் அமைப்பின் சார்பில் ஒரு லட்சம் பேர் கலந்துகொள்ளவுள்ளதாக அக்கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த தினம் இரு ஊர்வலங்களில் ஒன்று இளைஞர் அமைப்பினால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இரண்டாவது ஊர்வலம் தொழிற்சங்களின் பிரதிநிதிகளினால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிகமான இளைஞர் யுவதிகளும், தொழிலாளர்களும் கலந்துகொள்ளும் ஒரு மே தினம் இதுவாகும் எனவும் சாந்த பண்டார மேலும் கூறியுள்ளார்.