அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் – மாதிரி காணொளியை வெளியிட்டது வடகொரியா

216 0

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்துவது தொடர்பான மாதிரி காணொளி ஒன்றை வடகொரியா வெளியிட்டுள்ளது.

வடகொரிய இணையதளத்தில் வெளியான அந்த காணொளியில், அண்மையில் கொரிய திபகற்பத்திற்கு அமெரிக்கா அனுப்பிய நீர்மூழ்கி கப்பல் மீது தாக்குதல் நடத்துவது போன்றும், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்துவது போன்றும், சித்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடகொரியா அண்மையில் மேற்கொண்ட ஏவுகணை சோதனை தொடர்பான காட்சிகளும் இந்தக் காணொளியில் இணைக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவின் இந்தச் செயல் இரு நாடுகளுக்கிடையிலான பதட்டத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.