வெனிசுலாவின் பொதுத் தேர்தல் உடனடியாக நடைபெற வேண்டும்

227 0

வெனிசுலா தற்போது எதிர்நோக்கும் நெருக்கடியினை தீர்ப்பதற்கு பொதுத் தேர்தல் ஒன்று உடனடியாக நடைபெற வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெனிசுலாவின் எதிர்கட்சித் தலைவர் ஹென்றிக் கைப்ரைல்ஸ் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி, வெனிசுலா மக்களுக்கு எதிராக மிருகத்தனமான அடக்கு முறையினை பிரயோகிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், ஜனாதிபதியினால் ஆட்சியில் நீண்ட காலம் நிலைக்க முடியாது எனவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மனித உரிமை மீறல்கள், பொருளாதார வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் தொடர்பாக இந்த மாதத்தில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது 30 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.