அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு முறையான திட்டமிடல் இல்லை

237 0

அனர்த்த நிலமைகளின் போது முகங்கொடுக்கும் விதத்தில் சரியான திட்டங்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.

குப்பைகளை அகற்றுவது சம்பந்தமாக மற்றும் மீதொட்டமுல்ல குப்பை மேடு சம்பந்தமாக இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இந்த விவாதத்தில் கருத்துரைத்த அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க, கழிவு முகாமைத்துவத்திற்காக பொறுப்புள்ள நிறுவனம் ஒன்றின் தேவை தொடர்பில் கூறியதுடன், வைத்தியசாலைகளின் மருத்துவ கழிவுகள் தொடர்பிலும் தௌிவுபடுத்தியுள்ளார்.

கழிவகற்றும் செயற்பாடுகளும் அரசியலாக்கப்பட்டுள்ளதாக விவாதத்தில் கலந்து கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கூறினார்.