தமிழ் முற்போக்கு கூட்டணியின் மே தினக் கூட்டம் தலவாக்கலையில்

213 0

தமிழ் முற்போக்கு கூட்டணியின் இம்முறை மே தினக் கூட்டம் தலவாக்கலை பொது மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அதனடிப்படையில் , தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் , அமைச்சர் பீ திகாம்பரம் மற்றும் இராஜாங்க அமைச்சர் வீ ராதாகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையில் இம்முறை மே தினக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி மே தினக்கூட்டம் இடம்பெறும் முன் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலத்தின் அருகில் இருந்து தலவாக்கலை பொது மைதானம் வரை மே தினப்பேரணியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.