உயர்தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகள் வெளியீட்டு திகதி அறிவிப்பு

246 0

கடந்தாண்டு இடம்பெற்ற உயர்தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகள் இன்று (28) அல்லது நாளை (29) வௌியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது .

பரீட்சை விடைத்தாள் மீள் மதிப்பீட்டிற்காக 58,000 விண்ணப்பங்கள் கிடைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் 2016 – 2017 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக மாணவர்களை தெரிவு செய்வதற்கான வெட்டுப் புள்ளிகள் மே மாதத்தின் இறுதிப்பகுதியில் வௌியிடுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.