டெங்கு ஒழிப்பு தொடர்பில் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை கண்டறியும் நோக்கில் சுகாதார அமைச்சினால் விஷேட சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த சோதனைகள் நாளை மற்றும் நாளை மறுதினம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் டெங்கு ஒழிப்பு பிரிவுக்கு சுகாதார அமைச்சினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது டெங்கு நோய் தொற்று தொடர்பில் 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தப்படும் எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

