ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு குறித்து இலங்கையும் இந்தியாவும் கலந்துரையாடியுள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அந்த அமைப்பின் பிராந்திய வளர்ச்சி குறித்து தெரிந்துக்கொள்ளும் பொருட்டு தொடர் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும் இரு நாடுகளும் இதன் போது இணங்கியுள்ளன.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் தொடர் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும் இணக்கம் எட்டப்பட்டது.
இதனிடையே, சர்வதேச கடல் எல்லையை தாண்டும் கடற்றொழிலாளர்கள் விடயம் தொடர்பிலும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

