ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க எதிர்வரும் மாதம் 4 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் புத்திக ஶ்ரீ ராகல முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன் போது , மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் இருந்து பரிசோதனைக்காக பொரளை ஜின் டெக் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மனித எச்சங்களை மீண்டும் நீதிமன்ற பொறுப்பின் கீழ் கொண்டுவருமாறு அவர் உத்தரவிட்டிருந்தார்.

