இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்கும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவது குறித்த வாக்கெடுப்பானது இன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கை நேரப்படி வாக்களிப்பு பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளது.
குறித்த வரிச்சலுகையை இலங்கைக்கு பெற்றுக்கொள்வது குறித்து ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்றைய தினம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும், பெரும்பாளான உறுப்பினர்கள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், இலங்கை அரசாங்கத்தினால் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் ஜனநாயக செயற்பாடுகள், சட்டத்தை நடைமுறைப்படுத்தல், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்காக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

