சரத் பொன்சோகவிற்கு வழங்கப்படவுள்ள பதவி முப்படை தலைமை பொறுப்பல்ல – மஹிந்த அமரவீர

214 0

அமைச்சர் சரத் பொன்சோகவிற்கு வழங்கப்படவுள்ள பதவி முப்படை தலைமை பொறுப்பல்லவென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எனினும் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தற்போது பதவி வகிக்கும் பதவியில் இருந்து விலகியாவது அமைச்சர் சரத் பொன்சேகா இவ்வாறான பதவியை ஏற்றுகொள்ள வேண்டும் என அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.