ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை குறித்த வாக்கெடுப்பு இன்று

301 0
இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொடுப்பது குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைகயை வழங்கக் கூடாது என வலியுறுத்தி, 52 ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்தனர்.
ஜெனிவாவில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் தாமதமாக நிறைவேற்றப்படுகின்றமை, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாமை என்பன உள்ளிட்ட பல விடயங்களைச் சுட்டிக்காட்டியே இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டு இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
தீர்மானத்துக்கு 376 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால், ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை இலங்கைக்கு ஏற்படும்.
இந்த நிலையில், பிரசெல்ஸ் சென்றுள்ள வெளிவிவகாரப் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா,  ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது