கேப்பாபுலவு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கு ஜங்கரநேசன் விஜயம்

343 0

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகள்  முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் ஐம்பது   நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 57 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம், இன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் இன்றையதினம் குறித்த போராட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கு சென்ற வடமாகான விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஜங்கரநேசன் மக்களுடன் கலந்துரையாடினார் இவருரன் வடமாகானசபை உறுப்பினர்களான து ரவிகரன் மற்றும் ஆ புவனேஸ்வரன் ஆகியோரும் சென்றிருந்தனர்.