கெகிராவ – மரதன்கடவல பிரதேசத்தில் கிணறு ஒன்றில் வீழ்ந்து தாய் மற்றும் அவரது குழந்தையும் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மினுவங்கொடை பிரதேசத்தினை சேர்ந்த 37 வயதுடைய தாய் மற்றும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த தாயார் தனது குழந்தையுடன் மரண வீடு ஒன்றுக்கு சென்றுள்ள நிலையிலே, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

