பன்னங்கண்டி கவனயீர்ப்புப் போராட்டம் – 36வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

291 0
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதிகமம் பகுதியில் தனியார் ஒருவருக்குச்சொந்தமான காணியில் குடியிருந்து வரும் 120 வரையான குடும்பங்கள் தமக்கான காணி உரிமம் வீட்டுத்திட்டம் என்பவற்றை வழங்கக்கோரி மேற்கொண்டு வரும் கவனயீர்ப்புப்போராட்டம் இன்று 36வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி பன்னங்கண்டிப்பகுதியில் இரணைமடு நீர்ப்பாசனத்திட்டத்தின் கீழ் உள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான நீர்வரிக்காணியில் கடந்த 27 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் குடும்பங்கள் தமக்கான வீட்டுத்திட்டம் என்பவற்றை வழங்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்த போதும் குறித்த காணியானது ஏற்கனவே தனியார் ஒருவருக்கு உரித்துடைய காணியென்பதால் அதிகாரிகள் மட்டத்தில் எந்தவித முடிவுகளையும் எடுக்கமுடியாத நிலை காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த குடும்பங்கள் தங்களுடைய காணிகளுக்கு உறுதிப்பத்திரங்களை வழங்கி வீட்டுத்திட்டத்தை பெற்றுத்தருமாறு கோரி மேற்கொண்டு வருகின்ற கவனயீர்ப்புப்போராட்டம் இன்று 36வது நாளாகவும் தொடர்கின்றது.
ஏற்கனவே சிவபசுபதி கமத்தில் குடியிருந்;த 63 குடும்பங்களுக்கும் அ;தன் உரிமையாளர் தனது காணியை அந்த மஃக்களுக்கு வழங்கியது போன்று  குறித்த காணியின் உரிமையாளர் இந்தக்காணியை மக்களுக்கு வழங்குவதற்கு முன்வர வேண்டுமெனவும் இந்த மக்கள் கோரியுள்ளனர்.