காத்தான்குடி நகர சபையில் இருந்து 45 பணியாளர்கள் பணிநீக்கம்.

296 0

காத்தான்குடி நகர சபையில் பணிபுரிந்து வந்த 45 ஊழியர்கள் அதிரடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அனுமதி இன்றி அரசியல் செல்வாக்குகளுடன் நியமிக்கப்பட்டவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் கடந்த 12 முதல் 18 மாதங்கள் வரை காத்தான்குடி நகர சபையில் ஊழியர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர்.

இக்காலப் பகுதியில் இவர்களின் சம்பளத்திற்காக மட்டும் காத்தான்குடி நகர சபையின் நிதியில் இருந்தது சுமார் 150 இலட்சம் ரூபா வரை செலவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் முன்னாள் காத்தான்குடி நகர சபை தலைவர் ஆகியோரின் சிகார்சின்பேரில் இவர்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.