வடகொரியா விடயத்தில் அமெரிக்கா எதிர்வரும் தினங்களில் முக்கிய தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முழு செனட் சபையையும் வடகொரியா குறித்து விவாதிப்பதற்காக அழைத்துள்ளார்.
வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுத சோதனைகள் தொடர்பில் அமெரிக்கா பெரும் கரிசனைக் கொண்டுள்ளது.
இதனால் அமெரிக்கா, தென்கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாளையதினம் அமெரிக்காவின் செனட் உறுப்பினர்கள் மற்றும் ராஜாங்க செயலாளர் ஆகியோருக்கு இடையிலான முக்கிய கூட்டம் நடைபெறவுள்ளது.
இதன்போது வடகொரியா தொடர்பில் எவ்வாறான செயற்பாட்டை மேற்கொள்வது என்பது தொடர்பில் செனட் உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த தினம் சீனாவின் ஜனாதிபதி சீ ஜின்பின் அமெரிக்க ஜனாதிபதியை தொடர்பு கொண்டு வடகொரியா விடயத்தில் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே குறித்த செனட் கூட்டம் நடைபெறவுள்ளது.

