தனியார் பல்கலைக்கழகங்களை தரமுயர்த்த புதிய சட்டமூலம் – உயர் கல்வி அமைச்சர்

315 0

தனியார் பல்கலைக்கழகங்களை தரமுடையதாக்குதவற்காக எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் புதிய சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழங்களில் மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு போராட்டங்களின் பின்னணியில் சில சக்திகள் செயற்படுகின்றன.

இவ்வாறாக செயற்படுபவர்கள் 8, 9 வருடங்களுக்கு மேல் பல்கலைக்கழகங்களில் தொடர்ச்சியாக கல்வி கற்கின்றனர்.

இலங்கையில் இவ்வாறான விடயங்களுக்கு போதிய சட்டங்கள் இல்லை.

இதேவேளை, இலங்கையில் பெரும்பாலான மாணவர்கள் உயர்கல்வியைப் பெறக்கூடிய சூழ்நிலை இல்லாமல் உள்ளது.

பண வசதி உள்ளவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்கின்றனர்.

ஏனைய மாணவர்கள் கல்வியை இடைநடுவில் கைவிடுகின்றனர்.

இதனைத் தவிர்க்க தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாக்குப்படுவது அவசியமாகும்.

எனவே, தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான தர நிர்ணயம் குறித்து புதிய சட்டமூலம் ஒன்று விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.