ஆப்கானிஸ்தானில் உள்ள இராணுவ தளம் தாலிபான் போராளிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பலியான இராணுவத்தினரை கௌரவிக்கும் வகையில் ஒரு நாள் தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அதிரடித்தாக்குதலின் போது 140 பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர்.
மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் மனிதாபிமானமற்றதும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானதும் என ஜனாதிபதி அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.
தளத்தில் உள்ள பள்ளிவாசலில் தமது தொழுகையை நிறைவு செய்து விட்டு வெளியேறிக் கொண்டிருந்தவ இராணுவத்தினரே இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
தாலிபான்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு முகாமினுள் உள்ளவர்கள் ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக காயமடைந்த இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தாக்குதல் தம்மாலேயே மேற்கொள்ளப்பட்டதாக தாலிபான்கள் அறிவித்தனர்.
தாலிபான்கள் இராணுவ சீருடையணிந்த நிலையில் அதிரடியாக இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் குறைந்தது 10 தாலிபான் போராளிகளும் பலியாகினர்.
பலியானவர்களில் தாலிபான் தளபதி ஒருவரும் உள்ளடங்குவதாக அமெரிக்க கட்டளை தளபதி தெரிவித்துள்ளார்.
தாக்குதல் இடம்பெற்ற போது பல ஜேமன் மற்றும் வெளிநாட்டு இராணுவத்தினரும் முகாமில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

