குப்பை மேடொன்றில் இருக்கின்ற தற்போதைய அரசாங்கம் மற்றையவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தெல்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஸ காலத்தில் குப்பைகளை வீதிகளில் போட்டால் வழக்கு தொடுக்கப்பட்டது.
தற்போது, வீதியில் போடாவிட்டால் வழக்கு தொடுக்கப்படுகிறது. இதுவே ஏற்பட்ட மாற்றம்.
மருத்துவமனைகளில் நீர் மின்சாரம் என்பன கட்டாயமாக்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது.
எனினும் முதல் தடவையாக தற்போது குப்பைகள் அத்திhவசியப்படுத்தியுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

