அமெரிக்க யுத்த கப்பல்களும் ஜப்பானிய யுத்த கப்பல்களும் இணைந்து போர் பயிற்சி

309 0

வட கொரியாவிற்கு அண்மையில் உள்ள கொரிய தீபகற்பத்துக்கு உட்பட்ட கடற்கடற்பிராந்தியத்தில் அமெரிக்க யுத்த கப்பல்களும் ஜப்பானிய யுத்த கப்பல்களும் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் ஜப்பானிய படையணியினர் இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதியின் பணிப்புரைக்கமையவே இந்த போர் பயிற்சி நடவடிக்கைகள் இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் சர்வதேசத்தின் எதிர்ப்பினையும் உதாசீனம் செய்த நிலையில், வட கொரியா அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது.

இது வரை ஐந்து பாரிய சோதனைகளை வட கொரியா மேற்கொண்டுள்ள நிலையில், அமெரிக்க-ஜப்பான் கூட்டு இராணுவ பயிற்சி இன்று ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.